புரத சத்து சூப்

புரதச்சத்து நிறைந்த காளான் சூப்
உடல் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது புரதச் சத்துஉடல் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது புரதச்சத்து அந்த புரதச் சத்து இறைச்சி பருப்பு கொண்டைக்கடலை போன்றவற்றில் உள்ளது அதேபோல்   காளானிலும் உள்ளது எனவே அதை நம் உடல் எடை குறைப்பில் எவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம் என்றால் சூப் வடிவில் நம் ஒரு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்


காளான் சூப்

தேவையான பொருட்கள்:

காளான் :100 கிராம்
பூண்டு :5 பல்
சின்ன வெங்காயம்: 5
 தக்காளி :சிறியது (அல்லது )அரை
மிளகு சீரகம் :ஒரு ஸ்பூன்
உப்பு :தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி :ஒரு சிட்டிகை 
மல்லி இழை :சிறிதளவு


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதில்சுத்தம் செய்து  துண்டுகளாக நறுக்கிய காளானை சேர்க்கவும் அதில் மஞ்சள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பூண்டு சின்ன வெங்காயம் மிளகு சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் அந்தக் கலவையையும் அவற்றில் போடவும்அதை 10 -15 நிமிடங்கள் கொதிக்க விடவும் இப்போது சுவையான காளான் சூப் ரெடி மல்லி இலைகளை தூவி இறக்கி வைக்கவும் இதை நம் இரவு உணவாக உட்கொள்வது சிறந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொள்ளு சூப்

Weight loss tips tamil