இத தினமும் ஒரு டம்ளர் குடிச்சுப் பாருங்க கண்டிப்பாக உடல் எடை குறையும்
நீர் சத்து நிறைந்த சுரைக்காய்:
சுரைக்காயில் ,பொட்டாசியம் வைட்டமின் ,இரும்புச்சத்து , நார்ச்சத்து போன்ற நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளது
சுரைக்காய் சமையல் வகைகள்:
இந்த சுரைக்காயை நம் வாழ்வில் அன்றாடம் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தலாம் சிலர் சாம்பார் ,அவியல் ,பொரியல் , கூட்டு ,என பல்வேறு வகைகளில் இந்த காயை பயன்படுத்துவார்கள் இதில் ஜூஸ் கூட அடிக்கலாம் இந்தப்பதிவில் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க ஜூஸ் செய்முறை:
தேவையான பொருட்கள்:
சுரைக்காய்: 200 அல்லது 300 கிராம்
இஞ்சி :ஒரு துண்டு
கருவேப்பிலை :ஒரு கொத்து கொத்தமல்லி இலை :சிறிதளவு மிளகு :5
உப்பு :தேவைக்கேற்ப
சுரைக்காய் ஜூஸ் செய்முறை:
சுரைக்காயின் மேல் தோலை நீக்கி விட்டு உள்ளே இருக்கும் அனைத்தையும் அப்படியே மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் இஞ்சி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும் கருவேப்பிலை கொத்தமல்லி மிளகு உப்பு ஆகியவற்றைமிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும் இதை அப்படியே வேண்டும் என்றாலும் பருகலாம் வடிகட்டி வேண்டும் என்றாலும் பருகலாம்
சுரைக்காய் ஜூஸ் நன்மைகள்:
பித்தம் , கபம் போன்றவற்றை நீக்க வல்லது உடல் எடையை ,குறைக்க மிகவும் உகந்த பானம் வாத பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் அருந்தலாம் செரிமானத்திற்கு உகந்தது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது இதய பிரச்சினைகளை குறைக்கிறது இதில் நாம் இஞ்சி சேர்ப்பதால் கல்லீரல் பாதிப்பு குறைகிறது கல்லீரல் அழற்சியை குறைகிறது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய சுரைக்காயை தினமும் பருகி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம் நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக